தென்காசி முத்துக்குமாரசுவாமி ஆலயம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென்காசி முத்துக்குமாரசுவாமி ஆலயம் பற்றிய பதிவுகள் :

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் குற்றலாத்துக்கு அருகில் உள்ளதே ஆயிக்குடி என்ற கிராமம். அந்த கிராமத்தில் உள்ளது ஹனுமான் நாடி என்ற ஒரு நதி. அதன் கரையில்தான் முருகனின் ஆலயம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மூர்த்தி பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். 

அது பூமியில் புதைந்து கிடந்தது எனவும் அதை வெளியில் எடுத்து ஆலயம் அமைந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மூர்த்தி அந்த ஊரில் இருந்த மல்லான் என்பவருக்கு மல்லான் என்ற நதிக்கு உள்ளே கிடைத்ததாம். ஒரு காலத்தில் அந்த ஊரில் முருக பக்தர் சந்நியாசி என்பவர் நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்ததாகவும் அவர் மரணம் அடைந்ததும் அவரது சமாதியை ஹனுமான் நதிக்கரையில் கட்டியதாகவும், அதன் பின் மல்லானுக்குக் கிடைத்த முருகனின் மூர்த்தியை அவருடைய கனவில் தோன்றி முருகப் பெருமான் கூறியபடியே முருக பக்தர் சமாதி மீது ஆலயம் அமைத்து அங்கு வைத்தனராம்.

அந்த ஆலயத்துக்கு ஐந்து தல விருஷங்கள் இருப்பது இன்னொரு சிறப்பு. அவை ஆலமரம், வேப்ப மரம், கறிவேப்பிலை, மாதுளை மற்றும் வேம்பு மரங்கள் என்பவையாகும். அந்த இடத்தில் தோன்றிய ஹனுமான் நதியைப் பற்றிய புராணக் கதை என்ன என்றால், சீதையைத் தேடியவண்ணம் ஹனுமார் ராமருடன் அந்த வானகத்தில் வந்தபோது அனைவருக்கும் தாகம் எடுத்தது. பக்கத்தில் எங்குமே குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. 

ஆகவே ஹனுமார் தன்னுடைய கூர்மையான வாலினால் நிலத்தைத் தோண்டி அந்த இடத்தில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்த அதில் இருந்து கிடைத்த நீரைப் பருகி அனைவரும் தாகத்தை தனித்துக் கொண்டனராம். ஹனுமான் ஏற்படுத்திய அந்த நீர்தேக்கமே பின்னர் சிறு நதியாக மாறியது, அதன் பெயரும் ஹனுமான் நதி என ஆயிற்று .

அநேகமாக 1931 ஆம் ஆண்டில் திருவாந்தக்கூர் மகராஜா அந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை தன்னுடைய அரசாங்கத்தினராலேயே ஏற்க வைத்து ஆலயத்தை சீர்படுத்தினாராம். அந்த ஆலயத்திற்கு சென்று ஹனுமான் நாடி எனப்படும் நதியில் குளித்தால் காரிய சித்தி ஏற்படும், பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு  கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top