லிங்கோத்பவ மூர்த்தங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லிங்கோத்பவ மூர்த்தங்கள் பற்றிய பதிவுகள் :

சிவபெருமானின் அம்சங்களில் 25 அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றவை. அவற்றுள் முக்கியமான ஒன்று லிங்கோத்பவர். சிவபெருமான் தான் லிங்கம் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தியாக வணங்குகிறோம்.

லிங்கம் என்றால் உருவம்  உற்பவம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல் என்று பொருள் கூறுவர்.  சூன்யத்தில் இருந்து படிப்படியாக உருவம் கொள்ளும் நிலையே லிங்கோற்பவம் எனப்படும்.  ஒரு முறை சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திருமகளின் நாயகன் மகாவிஷ்ணுவ்க்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்று விவாதம் எழுந்தது.  அப்போது அவர்களின் அஞ்ஞானத்தை ஆழிக்க எழுந்த வடிவமே லிங்கோத்வர் என புராணங்கள் கூறுகின்றன.

லிங்க பாணத்தின் நடுவில் சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம்.  இதில் திருமுடியும் மறைக்கப்பட்டிருக்கும். இரண்டு நான்கு அல்லது எட்டு கரங்களுடன் சிவனார் திகழ, பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர்.  சிவலாயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில் லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம் முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே  இருந்துள்ளது.   லிங்கத்தின் நடுவில் சிவபெருமானும் மேல் பகுதியில் அன்னபட்சியாக பிரம்மனும் கீழ்ப்பகுதியில் வராகமாக திருமாலும் உள்ள லிங்கோத்பவ வடிவை பல கோயில்களில் காணலாம்.

லிங்கோத்பவ தத்துவ விளக்கத்தை சிவலிங்கத் தத்துவம் எனலாம். பஞ்ச பூதங்களின் ஒவ்வோர் அணுவிலும் நிறைந்துள்ளார் இறைவன். பஞ்ச பூதங்களில் காற்று நீர் ஆகாயம் ஆகியவற்றை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வர இயலாது.  ஜோதி உருவை கண்ணால் காணலாம்.  கொழுந்து விட்டு எரியும் தீயில், அதன் மையத்தை உற்று நோக்கினால் நீள் வட்ட வடிவத்தில்   நீல நிற பிரகாசத்தைக் காணலாம். இதையே லிங்கமாக்கினார் நம் முன்னோர். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி.

காஞ்சிபுரம் கயிலாயு நாதர் ஆலயத்தில் எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவரை தரிசிக்கலாம்.  வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் மானும் மழுவும் இடம் மாறி அமைந்திருக்கும் லிங்கோத்பவ மூர்த்தியைக் காணலாம்.  குன்றக்குடி மலைக்கொழுந்தீஸ்வரர் குகைக் கோயிலில் கிழக்குப்புறம் லிங்கோத்பவர் வடிவம் உள்ளது.  இவரின் வலப்புறம் பிரம்மனும் இடப்புறம் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். 

சுசீந்தரம் தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில் முழுமையன லிங்கோத்பவர் திருமேனி உள்ளது. இரு புறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கொலத்தில் உள்ளனர்.  திரு நெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரில் உள்ள பால்வண்ண நாதர் ஆலயத்தில் பஞ்சலோகத்திலான லிங்கோத்பவ மூர்த்தம் உள்ளது. தவிர திருமயம் குடிமல்லூர்  பிள்ளையார் பட்டி அரிசிற்கரை புத்தூர் திருச்செங்காட்டங்குடி நாகப்பட்டினம்  கூவம் மற்றும் கூளம் பந்தல் ஆகிய தலங்களில் உள்ள லிங்கோத்பவ வடிவங்களும் அற்புதமானவை.  இவரை வணங்கினால் ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top