மூன்று லிங்கத் திருமேனிகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மூன்று லிங்கத் திருமேனிகள் பற்றிய பதிவுகள் :

வரலாற்று சிறப்புமிக்க காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் திருக்கோயில். சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காளையார்கோவில். பெயருக்கு ஏற்றார் போல் இங்கு அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயமானது வரலாற்று சிறப்புமிக்க சிவ ஆலயங்களில் ஒன்று.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மும்மை சிறப்புகளை கொண்டது. அருள்மிகு செளந்தரவல்லி அம்மாள் சோமேஷர், அருள்மிகு சொர்ணவல்லி அம்பாள் சமேத காளீஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத சுந்தரேஸ்வரர் என்று மூன்று முக்கிய திருக்கோயில்களை ஒன்றாக்கி உள்ளடக்கியது. சொர்ண காளீஸ்வரர் கோயில்.

மூன்று லிங்கத் திருமேனிகளை தனித்தனி கருவறைகளாக கொண்டு மூன்று சிவாலயங்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்ட திருத்தலம் இது. பெரிய ராஜகோபுரத்தின் முன்னிலையில் காட்சி தரும் அருள்மிகு சோமேஷர், பிரம்மா, குபேரன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவரின் வலது புறம் சௌந்தர்ய வெள்ளமாக காட்சி தரும் அன்னை சௌந்தரவல்லி. இவ்வாலயத்தில் இந்திர நாள் வழிபட்ட சஹத்திர லிங்கமும் அருள் செய்கிறது. சன்னதிக்கு வலது புறம் இருபிரகாரங்களை உள்ளடக்கிய ஆன்மீக சொர்ணவள்ளி அம்மன் சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் உள்ள ராஜகோபுரமானது 152 அடி உயரம் கொண்டதாகும். இந்த திருத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்றும், மனநோய் நீங்கும் என்றும் இத்திருத்தலத்தில் பாதம் பட்டால் பாவ விமேசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top