தக்ஷண காசியாக விளங்கும் முறப்பநாடு கைலாசநாதர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தக்ஷண காசியாக விளங்கும் முறப்பநாடு கைலாசநாதர் பற்றிய பதிவுகள் :

தக்ஷண காசியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள நவ கைலாயங்களில் ஐந்தாவது கைலாயமாக முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது. நவ கைலாயங்களில் எந்த கோயிலுக்கும் இல்லாத பெருமை முறப்பநாட்டிற்கு உண்டு.

இந்தியாவில் கங்கை நதியும், தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டுமாம்.

இந்த இடத்தில் நீராடி கைலாசநாதர் வணங்கி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சூரபத்மன் தலைமையில் அசுரர்கள் செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் இறைவனை வேண்டி முனிவர்கள் முறைப்படி நின்று தவம் புரிந்த இடம் என்பதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாம்.

இந்த கோயிலில் வியாழன் பகவானின் அனைத்து சக்திகளையும் ஒருங்கி பெற்ற காணப்படுகின்றார். இதனால் பக்தர்கள் இந்த கோயிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்தால் நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

கோயிலின் உள்ளே சென்றவுடன் கொடிமரமும் அதன் எதிரே கைலாசநாதரும் உள்ளனர். கிழக்கு நோக்கி சிவகாமியம்மாள் சாந்த சுரூபிணியாக தனி கருவறையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இடது புறமாக 63 நாயன்மார்களும், குருபகவான் தட்சிணாமூர்த்தியும், கன்னி மூளையில் கன்னி விநாயகரும், முருகன் வள்ளி தெய்வானையுடன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியனார், சந்திரனும் அருள் பாலிக்கின்றனர்.

நவ கைலாயங்களில் நடு கைலாயமாக போற்றப்படும் இந்த கோயில், குரு ஸ்தலமாக விளங்குகிறது. மஹாபுஷ்கரத்தை ஒட்டி இக்கோயிலின் முன்னால் உள்ள தாமிரபரணி ஆற்றை பல லட்சம் பக்தர்கள் நீராடி வணங்குகின்றனர். இந்த ஆலயத்தில் பிரதோஷம், சோமவாரம், திருவாதிரை, திருக்கார்த்திகை, சூரசம்ஹாரம், குரு பெயர்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top