சிறப்பு வாய்ந்த சிவ வடிவங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த சிவ வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

மூலவரே உற்சவர்

சிதம்பரத்தில் நடராஜர் மூலவரே உற்சவருமாக வலம் வரும் நாள்கள்: 

1. ஆனித் திருமஞ்சனம் 
2. மார்கழித் தரிசனம்.

மரகத லிங்கம்

திருநள்ளாறு திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் சந்நிதியில் மரகதத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன.

மரகத நடராஜர்

திருஉத்தரகோச மங்கை திருத்தலத்தில் நடராஜர் மரகதத் திருமேனியுடன் காட்சியளிப்பார். எப்போதும் சந்தனக்காப்புடன் இருப்பார். திருவாதிரை நாளில் மட்டும் புதிய அலங்காரம் நடைபெறும்.

ஆண் பெண்ணாக உலா

திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும், இறைவி ஆண்வேடத்திலும் திருவீதிவுலா வருகிறார்கள்.

சிவனின் மானுட வடிவங்கள்

பெரிய புராணத்தில் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும்.

அவையாவன:

* தடுத்தாட்கொள்ள வந்த அந்தணர் வடிவம்.

* திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதியவர் வடிவம்.

* திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.

* திருக்கருகாவூரில் தண்ணீரும், பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.

* திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர் கோலம்.

 * பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட ஆதிசைவர் வடிவம்.

திருநாவுக்கரசருக்காக சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு:

 * திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம். 

* பனிபடர்ந்த இமயமலையில் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.

இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள்:

* திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.

 * இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்.

* இளையான்குடிமாற நாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்.

* அமர்நீதி நாயனாரை ஆட்கொள்ள வந்த பிரம்மச்சாரி வடிவம்.

* மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.

* திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட அருந்தவர் வேடம்.

 * சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பைரவர் வேடம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top