காணும் பொங்கல் சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காணும் பொங்கல் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, அடுத்து தைப்பொங்கல், பின்பு மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இப்பண்டிகையில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதல் என்பன அடங்கும். 

அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வார்கள். தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது எனலாம்.

பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். 

காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுக்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக காக்க, குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை. ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைக்க வேண்டும்.

உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களையும் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள், அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்று கூடி காணப்படுவதனால் தான் இது காணும் பொங்கல் ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top