சிவ லிங்க வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ லிங்க வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இது இந்தியாவில் காஷ;மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 

ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது? லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. லிங்கம் என்பது அடையாளம். எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். 

வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும்.

சிவ லிங்கத்தின் மகிமை :

அமைதியின் உருவமே சிவ லிங்கம்.

அனைவரின் துயர் தீர்ப்பதும் சிவ லிங்கமே.

சிவலிங்க வழிபாடு ஜீவனை நல்வழிப்படுத்தி முக்தி அளிக்கும்.

கலியுக அழிவுகளிலிருந்து லிங்கத்தின் மகிமை அறிந்தவன் விடுவிக்கப்படுவான்.

லிங்கத்தை வழிபடுபவன் தங்கத்துக்கும் அடிமையாகான்.

பலத்தைவிட பாவத்திற்கு சக்தி அதிகம். பாவங்களின் பலிபீடம் சிவ லிங்கம்.

சிவ லிங்கத்தை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் இல்லை.

சிவலிங்க வழிபாடு உலக உண்மையை உணர்த்தும்.

மனித உணர்வுகளிலிருந்து விடுபட்டவர்கள் போக ஏனையோர் உலக ஆபத்துகளால் சிக்கி உள்ளார்கள். 

மனித உணர்வுகளிலிருந்து விடுபடுவதற்கான வழி சிவலிங்க வழிபாடாகும்.

சிவனை வழிபட்டும் பலன் இல்லையே என்று கூறுபவர்கள் யாரும் இல்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top