இராகு கால பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இராகு கால பூஜை பற்றிய பதிவுகள் :

நவகிரகங்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும். ஒவ்வொரு நாளும் நல்லன செய்வதற்கு தகாத விசக்கடிகையாக 1.30 மணி நேரம் இராகு காலமாகக் கருதப்பட்டு வருகிறது. 

அந்த இராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிறவாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி ஸ்ரீ துர்க்கையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு மிகவும் விஷேசம்.

செவ்வாய்க் கிழமையன்று நல்ல மஞ்சள் நிறமுள்ள ஐந்து எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றை அம்பாளின் திருவடிகளில் பிழிந்துவிட்டு, எலுமிச்சைத் தோல்களை எதிர்புறமாக மடக்கி கிண்ணம் போல் அமைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். 

இவ்வாறு ஐந்து எலுமிச்சை மூடிகளின் மொத்தம் பத்து விளக்குகள் செய்யலாம். அதில் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு ஒன்பது விளக்குகளை மட்டும் அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும். 

ராகு கால பூஜையின் போது இராகு கால துர்க்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாராணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முதலியவற்றை பக்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம். 

ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், செவ்வாய் கிழமை ராகு காலப்பூஜை செய்யலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top