சந்திரன் என்னும் மாய சக்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திரன் என்னும் மாய சக்தி பற்றிய பதிவுகள் :

மாதாகாரகன், மாதுர் காரகன் என அழைக்கப்படும் சந்தரனே அனைத்து தசைகளிலும் ஜாதகரை பின்னின்று வழிநடத்துவார்.

பௌர்ணமி சந்திரன் குருவை விட சுபத்தன்மை பெற்றவராவார். ஒரு ஜாதகத்தில் லக்னம் வலு இழந்தாலும், சந்திரன் மட்டும் ஒரு நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஜாதகம் முழுமையாக சந்திரனால் வழிநடத்தப்படும்.

மனதை ஆளும் மனோகாரகனான சந்திரன், எந்த லக்னமாக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் என்ன தசை நடக்கும் பொழுதும் ஜாதகரின் மன நிலையை, மாற்றுவதும், உருக்குலைந்து போக செய்வதும் சந்திரன் வலு தன்மை பொருத்தே.

அதாவது, ராகு திசையில் ஒருவருக்கு சூதாட்டத்தின் மீது நாட்டம் அதிகரிக்க வேண்டும் என்றால் அவரின் மனம் முதலில் மாற வேண்டும். மனதை மாற்றி வேறு வழியில் திசை திருப்புவது சந்திரனின் வலு தன்மையைப் பொறுத்ததே.

உதாரணமாக ஒருவருக்கு சந்திராதி யோகத்தில், அல்லது ஒளிபொருந்திய சந்திரன் ஜாதகத்தில் அமைந்து ராகுவுடன் சுபகிரகங்கள் இணைந்து அல்லது பார்த்து தொடர்புகொண்டு தசா நடக்கும் போது ஜாதகரின் மனமானது ஒருநிலை படுத்தப்படும். நெறி தவறாமல் இருப்பார். 

உதாரணமாக ஒருவருக்கு ஆன்மீக மற்றும் தான தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும் என்றால் முதலில் அத்தகைய எண்ணத்தை உருவாக்குபவர் அங்கே சந்திரன்.

எந்த கிரகங்களும் சந்திரன் வழியாகவே மனிதனை ஆட்கொள்கின்றன. அதனால்தான் எண்ணம் அழகானால் வாழ்க்கையும் அழகாகும் என சொல்லி இருக்கிறார்கள்.

மனதை கெடுக்கும் மாயாவி இங்கே சந்திரனே என்பதை உணர்க. ஒரு பௌர்ணமி சந்திரனின் ஒளி தன்மையில் ஒருவருக்கு காதல்கவிதைகள் பெருக்கெடுத்து ஓடுவது,
மனமும், ஒருவித விரக்தியும் வெறுப்பும் அடைவதும் சந்திரனின் கோட்சார நிலை பொறுத்ததே ஆகும்.

உணவு நீர் நிலைகள் என அனைத்திற்கும் காரகம் வகிப்பவர் சந்திரன் ஒருவர் உண்ணக்கூடிய உணவானது, உடலில் சீராக ஜீரணித்து வளர்சிதை மாற்றம் ஏற்படுவதற்கும் சந்திரனே காரணகர்த்தாவாக இருக்கிறார், ,

மனிதர்களின் கண்களுக்கு அதிகம் புலப்படும் ஒரே கடவுளாக சூரிய சந்திரர்களே இருக்கிறார்கள். சூரிய வழிபாடு மற்றும் பௌர்ணமி சந்திர வழிபாடு போன்றவை ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும்.

சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் கேட்டல் போன்றவை சூரியனை வலுப்படுத்தும் செயல்களாக அமைவது போல நீர் நிலைகளில் நின்று சந்திர வழிபாடு செய்வது, மனதை அமைதிப்படுத்தும்.

மன அழுத்தம் மன நிலை பாதிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கு சந்திர ஒளி குறிப்பாக ஒளிபொருந்திய பௌர்ணமி சந்திர ஒளி தன்மையானது மனதை மாற்றும் சக்தி பெற்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top