பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பொங்காலை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பொங்காலை பற்றிய பதிவுகள் :

திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா வரும் 27ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.

முதல் நாள் விழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தோற்றம்பாட்டு என்ற கண்ணகி தேவி வரலாறு பாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாடப்படும் வரலாற்று பாடலுக்கு ஏற்ப அன்றைய தினம் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்காலை நடைபெறும் மார்ச் 7ம் தேதி கண்ணகி தேவி பாண்டியமன்னனை வதம் செய்து வெற்றியுடன் ஆற்றுகால் தலத்துக்கு வருகை தந்து குடியிருக்கும் பாடல் பாடப்படுகிறது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் மூன்றாம் நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். 

ஒப்பதாம் நாள் விழா அன்று மாலையில் சிறுவர்களை மிக அழகாக அலங்கரித்து தேவியின் திருநடை முன்பு அழைத்துவருவார்கள். அம்மன் வீதி உலா செல்லும் சமயத்தில் சிறுவர்களின் விலாவின் இரண்டு பகுதிகளிலும் கொக்கி போன்ற உலோகத்தை குத்திக்கொள்வார்கள்.

அம்மன் வீதியுலா முடிந்து மீண்டும் ஆலயத்துக்குள் வந்ததும் விலா பகுதியில் உள்ள உலோககொக்கிகள் அகற்றப்படும். இந்த நிகழ்வு குத்தியோட்டமாகும். மார்ச் 7-ம் தேதி பிரசித்திபெற்ற ஆற்றுகால் பொங்காலை விழா நடைபெற உள்ளது. காலை சுத்த புண்யாக சடங்கை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பண்டாரஅடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்காலையிடுவார்கள். 

இதற்காக தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இலவச சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top