சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள் பற்றிய பதிவுகள் :

சூரியனுக்கான திதி சப்தமி திதி ஆகும். இந்த சப்தமி திதி ஞாயிற்றுக்கிழமை சேர்வது மிகவும் சிறப்பு. மேலும் வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சேர்வது அளவற்ற நன்மைகளை கொடுக்கும். 

மேலும் பிரதி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய சதகம், ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதாலும் சூரிய தோஷங்கள் விலகி நன்மைகள் ஏற்படும்.

விரத முறை :

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பகலில் 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சிகப்பு மலர்களால் சூரிய பூஜை அல்லது சிவபூஜை செய்து கோதுமை பண்டங்களால் ஆன பலகாரங்களை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கி தானும் எடுத்துக் கொள்ள சூரிய தோஷங்கள் விலகும்.

சூரியனுக்கான சிறப்பு விரத நாட்கள் :

1. வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்கள்.

2. சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடும் பானு சப்தமி நாட்கள்.

3. சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் வளர்பிறையில் வரும் கல்யாண அல்லது விஜய சப்தமி நாட்கள்.

4. சைத்ர சுத்த சப்தமி அன்று வரும் கமல சப்தமி ,சந்தான சப்தமி பாஸ்கர தமனம் உள்ள நாள்.

5. யுகாதி புண்ணிய தினங்கள், யுகாந்தப் புண்ணிய தினங்கள், மன்வாதி புண்ணிய தினங்கள், கல்பாதி புண்ணிய தினங்கள், வைதிருதி சிராத்த தினங்கள், வியதீபாத சிராத்த தினங்கள், திஸ்ரோஸ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றில் தில ஹோமங்கள், பித்ரு பூஜைகள் செய்வது.

6. வைசாக சுக்ல திருதியையில் நிகழும் அக்ஷய திருதியை நாள்.

7. வைசாக சுக்ல சப்தமி அன்று வரும் கங்கோத் பத்தி, கங்கா சப்தமி நாள்.

8. பாத்ரபத சுக்ல சப்தமி அன்று வரும் அமுக்தாபரண சப்தமி மற்றும் அமுக்தாபரண விரத நாள்.

9. மார்க சிர சுத்த சப்தமி அன்று வரும் சூரிய விரதம், பல சப்தமி விரதம்.

10. மார்கசிர கிருஷ்ண சப்தமி அன்று வரும் சர்வ சப்தமி நாள்.

11. மாக சுத்த சப்தமி அன்று வரும் ரத சப்தமி, சூரிய ஜெயந்தி, அசோக சப்தமி, விரத நாட்கள்.

12. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் மாத பிறப்பு நாட்கள்.

13. உத்திரம் நட்சத்திரம் உள்ள நாட்கள்
விஷு புண்ணிய காலங்கள், விஷ்ணுபதி புண்ணிய காலங்கள், தக்ஷாயன மற்றும் உத்தராயன புண்ணிய காலங்கள், ஷடசீதி புண்ணிய காலங்கள் ஆகிய இந்த நாட்களில் பிற்பகல் 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள் இறந்த முன்னோர்களுக்கான பூஜைகள் செய்து சூரிய பூஜை செய்ய பித்ரு சாபங்கள் விலகும். 

சூரிய பகவானுக்கான பரிகார ஸ்தலம் :

வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்கள் நட்சத்திரத்திற்கு தார பலன் உள்ள நாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று அங்கு முறைப்படி தீப வழிபாடு செய்து வர சூரிய தோஷங்கள் விலகும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top