துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :

வில்லும், அம்புகளும் :

துர்க்கை அம்மன் கையில் வில்லும் அம்புகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் கட்டுப்படுத்துவதை குறிக்கும்.

இடியேறு :

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும்.

பாதி மலர்ந்த தாமரை :

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, சேறுக்கு மத்தியில் பூப்பதை போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மிகத்தை நாட வேண்டும் என்பதை குறிக்கும்.

வாள் :

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் வாள் அறிவை குறிக்கும். அறிவே இவ்வுலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது.

சுதர்சன் சக்ரா :

உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது.

திரிசூலம் :

திரிசூலம் என்பது சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ் என்ற மூன்று அம்சங்களை குறிக்கும்.

அபய முத்திரை :

துர்க்கை அம்மனின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top