துர்க்கை அம்மன் பார்வதியின் ஆங்கார வடிவங்களில் ஒன்றாகத் திகழும் பெண் தெய்வம் ஆகும். துர்க்கை என்றால் எவராலும் வெல்லமுடியாதவள் என்று பொருள்.
அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிஷாசுரனை அழிக்கவே அவள் தோன்றியதாக சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.
சிவபுராணத்தின்படி, படைப்பின் ஆரம்பத்தில், ஈசனின் இடப்பாகத்திலிருந்து துர்க்கை தோன்றியதாக கூறப்படுகிறது.
ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால், வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களுக்கும் கூடிய விரைவிலேயே தீர்வு காண முடியும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினால் அதிக பலன்கள் கிடைக்கும்.