ஐஸ்வர்யம் தரும் தேய்பிறை அஷ்டமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐஸ்வர்யம் தரும் தேய்பிறை அஷ்டமி பற்றிய பதிவுகள் : 

திரியம்பகாஷ்டமி

இந்த நாளில், பைரவரை வழிபடுவதும் அன்னதானம் செய்வதும் ஐஸ்வரியத்தை அள்ளித் தரும்.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.

பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் அனைத்தும் அகலும்.

பைரவரை வணங்கினால், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு :

அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பதாக ஐதீகம். எனவே, தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வணங்கினால், அஷ்டலட்சுமியரின் அருளும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வ கடாட்சம் கிடைக்கப் பெறலாம். நம் பாவங்கள் விலகி, புண்ணியங்கள் பெருகும்.

நீண்டநாளாக வர வேண்டிய பணம் வந்துசேரும். தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். சனியின் தாக்கம் தீரும்.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 
வீட்டில் தரித்திரம் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top