செவ்வாய் தோஷம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செவ்வாய் தோஷம் பற்றிய பதிவுகள் :

செவ்வாய் தோஷம் என்று கேட்டவுடன் பலர் அலறுவார்கள். காரணம், கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் தோஷங்களில் இது முக்கிய தோஷம் ஆகும். 

பொதுவாக, ஆண் அல்லது பெண் யார் ஜாதகம் ஆக இருந்தாலும் ஜாதகக் கட்டத்தில் லக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும்.

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளது.

செவ்வாய் தோஷத்திற்காக விதிவிலக்குகள் : 

மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என ஜோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2 ஆம் இடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.

4 ஆம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.

7 ஆம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.

8 ஆம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை.

செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் :

மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாவ பலனாக வந்து சேர்கிறது.

செவ்வாய் தோஷத்தால் உண்டாகும் பிரச்சினைகள் :

திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, குழந்தையின்மை, மணமுறிவு, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், ஒழுக்கமின்மை, மாங்கல்ய பலமில்லாமை, சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்சினைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகிறது.

செவ்வாய் தோஷ பரிகாரங்கள் :

முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு சிறப்பு தரும். 
அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடவும். அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபடவும்.

வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும்.

வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள்.
நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்கள் செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top