காயத்ரி மந்திரம், மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது விசுவாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது. காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும்.
மந்திரம் :
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமி
தியோ யோந ப்ரசோதயாத்
விளக்கம் :
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் :
தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது.
இந்த மந்திரம் மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான சக்திகளே.
இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.
1. தடைகளை நீக்கும்
2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்
3. அறியாமையை போக்கும்
4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும்
5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்
6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.
காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது. காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும்.
காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள் காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும்.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
காயத்ரி மந்திரத்தின் பலன்கள் :
காயத்ரி மந்திரத்தினை தினசரி உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.
காயத்ரி மந்திரத்தினை உச்சரித்தால் எல்லாவித ஆபத்துகளும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும் சொல்லப்படுகிறது.