நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சதுர்த்தசி திதி பற்றிய பதிவுகள் :
சதுர்த்தசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது.
இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் பதினான்காவது திதி சதுர்த்தசி ஆகும்.
சதுர்த்தச எனும் வடமொழிச் சொல் பதினான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட காலக் கணிப்பில் பதினான்காவது நாளாக வருவதால் இந்த நாள் சதுர்த்தசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தசியைச் சுக்கில பட்ச சதுர்த்தசி (அ) வளர்ப்பிறை சதுர்த்தசி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சதுர்த்தசி கிருஷ்ண பட்ச சதுர்த்தசி (அ) தேய்ப்பிறை சதுர்த்தசி என்றும் அழைக்கப்படுகிறது.
சதுர்த்தசியின் சிறப்புகள் :
தீபாவளி பண்டிகையானது சதுர்த்தசி திதியில் தான் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அமாவாசை முன்தினம் வரும் தேய்ப்பிறை சதுர்த்தசியான நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தசியானது காளிதேவிக்கு உகந்த நாளாகும்.
சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் கோபமுடையவர்களாகவும், நாத்திகவாதியாகவும், செல்வ வளமுடையவர்களாகவும் இருப்பார்கள்.
சதுர்த்தசி திதி அன்று எண்ணை தேய்த்துக் குளித்தல், புலால் உண்ணுதல், பிரயாணம் செய்தல் போன்ற காரியங்கள் செய்யலாம்.