சந்தியா வந்தனம் என்றால் என்ன?

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்தியா வந்தனம் பற்றிய பதிவுகள் :

வைணவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சந்தியா வந்தனம் செய்வார்கள்.

சந்தியா வந்தனம் என்றால் என்ன?

சந்தி என்றால் சந்திப்பு என்று பொருள். இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் சந்தி அல்லது சந்தியா என்று பெயர்.

இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுளை வந்தனம் செய்வதற்கு சந்தியாவந்தனம் என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.

தினமும் இந்த சந்தியா வந்தனம் செய்வதால் புத்திக்கூர்மை மட்டும் இல்லை நன்மையும் கிடைக்கும். கடவுளை மனதில் நிறுத்தி தியானம் செய்வதனால் எந்த ஒரு தீமையும் நம்மிடையே நெருங்காது.

ஒவ்வொருவரும் சந்தியா வந்தனம் செய்து கடவுளின் ஆசியையும், புத்திக்கூர்மையையும் பெற்று நலமோடு வாழ வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top