குலதெய்வ விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குலதெய்வ விரதம் பற்றிய பதிவுகள் :

வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் பல கோவில்களுக்கு சென்று தங்களது பிரார்த்தனை நிறைவேறுமாறு வேண்டிக்கொள்வர். 

இவ்வாறு வாழ்வில் முன்னேற முடியாமல் இருப்பவர்கள் குலதெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் முன்னேற்றத்தை காணலாம்.

குலதெய்வ கோவிலுக்குச் சென்றால் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின் அர்ச்சனை செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு செய்வது முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

ஒரு வேலையை தொடங்கும் முன் குல தெய்வத்தை மனதார வணங்கி பின் அவ்வேலையை துவங்கினால் சிறப்பாக அமையும்.

பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் விரதம் இருந்து குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் அவர்களது பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.

குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top