ராகு - கேது அருளைக் கொடுக்கும் துதி பாடல்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராகு - கேது அருளைக் கொடுக்கும் துதி பாடல்கள் பற்றிய பதிவுகள் :

மனித தலையும் பாம்பு உடலும் உள்ளவரை ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் உள்ளவரை கேது என்றும் அழைக்கப்பட்டனர். 

நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. பொதுவாக எல்லா கிரகங்களும் கடிகார முள்சுற்றும் திசையில் சுழல்கின்றன. 

ஆனால் ராகுவும், கேதுவும் மட்டும் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஒரு ராசியில் ராகு-கேது ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் சனி, ராகு - கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

 அந்த வகையில் ராகு - கேது பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. ராகுவும் - கேதுவும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள்.

ராகு - கேது பெயர்ச்சியில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் கூட, ஒருவரது ஜாதகத்தில் நல்ல தசா புத்தி இருந்தால் கண்டிப்பாக பாதிப்பு குறையும். 

ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரது கர்ம வினைக்கு ஏற்றவாறு ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம் மாறுகின்றன.

ஒரு கிரகம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவையான இந்த ராகு - கேது, நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரகங்களை விட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக்கூடியவையே என்று கூறலாம்.

ராகு, தான் இணைந்திருக்கிற கோளின் தன்மையையும், அமர்ந்திருக்கிற பாவகத்தின் தன்மையையும் வெகுவாக உயர்த்தி பலன் தரும் ஆற்றல் கொண்டவர். அதுபோல கேது, தான் இருக்கும் இடத்தின் பலத்தை வெகுவாக குறைப்பார். 

பொதுவாக ராகு - கேது இருவரையும் பாம்பு என்று எண்ணி தேவையில்லாமல் பயம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்குள்ளேயே பலனை சமன் செய்யும் குணம் அமைந்திருப்பதால் அவர்களால் உண்டாகும் தீமையும், நன்மையும் சரிசமமாகவே இருக்கும். 

வருகின்ற இராகு - கேது பெயர்ச்சியினால் அனைத்து ராசி அன்பர்களும் நன்மை பெற வேண்டிக்கொண்டு எளிதாக இருக்கும் இந்த துதிப்பாடலை படித்து பயன்பெறுங்கள். 

ராகு - கேதுவிற்கான துதிப்பாடல் !

சர்ப்ப கிரகமாய் தணியில் வந்து 
சந்தோஷத்தை வழங்கும் அரவே
ஒப்பற்ற நிலையை நாங்கள் பெறவும் 
உள்ளம் மகிழும் வாழ்வைத் தரவும் 

நற்பலன் கொடுக்கும் ராகு கேதுவே!
நாளும் உன்னைத் துதிக்கின்றோமே!
எப்பொழுதும் நீ எமக்கு அருள்க!
இதயம் மகிழும் வாழ்க்கையைத் தருக !

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top