சங்கடம் தீர்க்கும் சனி மகா பிரதோஷம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சங்கடம் தீர்க்கும் சனி மகா பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமமானது. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும்.

சாதாரணமாகவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது. அதிலும் இன்று வந்துள்ள சனி மகா பிரதோஷம் கூடுதல் சிறப்புடையது.

பிரதோஷ வழிபாடு

சிவ பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானதாக சொல்லப்படுவது பிரதோஷ விரதம். “ப்ர” என்றால் விசேஷமானது என்று அர்த்தம். “தோஷம்” என்றால் எல்லோரும் அறிந்தது தான். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும், நீக்கக்கூடியது தான் இந்த பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தன்று சிவனை நினைத்து வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.

மகா சனிப்பிரதோஷம்

பாற்கடலை கடைந்த போது முதலில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார் சிவ பெருமான். ஆனால் அமிர்தம் கிடைத்த பிறகு சிவனுக்கு நன்றி சொல்ல மறந்த தேவர்கள், பிறகு தவறை உணர்ந்து சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனமாடி தேவர்களுக்கு சிவப் பெருமான் காட்சி கொடுத்து, அருள் செய்த காலம் தான் பிரதோஷ காலமாகும். ஆலகால விஷத்தை உண்டு, கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாகி தேவர்களையும் உலக உயிர்களையும் சிவபெருமான் காத்த தினம் சனிக்கிழமை. இதனால் தான் சனி பிரதோஷம், சனி மகா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். 

நந்தியின் இரண்டு கொம்பிற்கும் இடையே சிவபெருமான் எழுந்தருளி நடனமாடும் நேரம் தான் இந்த பிரதோஷ காலம். நாம் சிவபெருமானை, பிரதோஷ காலத்தில் நந்தியின் இரண்டு கொம்பிற்க்கும் இடையே பார்த்து தரிசிப்பது சிறப்பானது.

பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அந்த ஈசனின் நாமத்தை சிறிது நேரம் உச்சரித்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பிரதோஷ தினத்தன்று விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 6 மணி வரை உணவு ஏதும் அருந்தாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ நேரமானது மாலை 4.30 மணிக்கு தொடங்குகின்றது.

அந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் நடைபெறும் போது சிவனை நினைத்து “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கூறி ஆலயத்தில் சிவனை வழிபட வேண்டும். மாலை 6 மணிக்கு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு நம் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top