ஆடி அமாவாசை விரதத்தின் அற்புதமான சிறப்புகளும், பலன்களும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசை விரதத்தின் அற்புதமான சிறப்புகளும், பலன்களும் பற்றிய பதிவுகள் :

ஆடி அமாவாசை நாள் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசை அதீத சிறப்பு வாய்ந்ததாகும். 

இந்த நாளில் நாம் இருக்கும் விரதம் அளவில்லாத புண்ணிய பலன்களை அள்ளித் தரக் கூடியதாகும். ஆடி அமாவாசைக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு, இந்த நாளில் விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
    
முன்னோர்களை கண்டிப்பாக வழிபட்டு அவர்களின் ஆசிகளை பெறுவதற்கு மிகவும் உகந்த காலம் ஆடி அமாாவசை நாளாகும். முன்னோர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பிறகு செய்ய வேண்டிய பித்ரு கடன் எனப்படம் தர்ப்பணம் அளித்து, விரதம் இருந்து, அவர்களிடம் வேண்டிய வரங்களை பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாள் ஆடி அமாவாசை நாள்.

ஆடி அமாவாசை சிறப்புகள் :

தந்தை ஸ்தானத்திற்கு உரிய கிரகமான சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் தாய்க்கு உரிய கிரகமான சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் நாள் ஆடி அமாவாசை நாளாகும். 

இதனால் இந்த நாளில் நமக்கு முன் வாழ்ந்து மறைந்து, முக்தி பெற்ற முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டியது அவசியம். இப்படி வழிபடுவதால் நிறைவேறாத ஆசைகள், சாபங்கள் ஆகியவற்றால் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி கிடைக்கும்.

ஒருவேளை முன்னோர்கள் வேறு ஒரு பிறவி எடுத்திருந்தால் அவர்கள் அந்த பிறவியிலும் நற்கதியை பெற வேண்டும் என வேண்டிக் கொள்ளும் சிறப்புக்குரிய நாள் ஆடி அமாவாசை. இந்த நாளில் முன்னோர்களுக்காக நாம் செய்யும் வழிபாடு, தான தர்மங்கள், தர்ப்பணங்கள் ஆகியன தலைமுறை தலைமுறையாக நம்முடைய இருக்கும் பாவங்கள், சாபங்கள் ஆகியவற்றை போக்கும்.

தர்ப்பை பயன்படுத்துவது ஏன் ?

ஆடி அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் இரைத்து, தர்ப்பையும் அளிப்பது அளவில்லாத புண்ணியத்தை தரும். புற்களில் தர்ப்பை புல் மிகவும் விசேஷமானதாகும். தானாக தோன்றி, நிலத்தில் வாடாமலும், நீரில் அழுகாமலும் இருக்கும் தண்ணை கொண்டது தர்ப்பை. 

இதனால் இதில் முன்னோர்களின் ஆத்மாவை ஆவாஹணம் செய்து, வழிபடுகிறார்கள். அமாவாசை, கிரகணம் போன்ற காலங்களில் தர்ப்பை புல்லின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் தான் இந்த புல்லினை பயன்படுத்தி தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.

ஆடி அமாவாசை விரத பலன்கள் :

நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை அமாவாசை நாட்களில் தவறாமல் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து விடுபட முடியும். ஆடி அமாவாசையன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்க வேண்டும். 

இதனால் பித்ரு தோஷத்தால் தடைபட்டு இருந்து குலதெய்வத்தின் அருள் கிடைக்க செய்யும். எள்ளும் தண்ணீரும் இரைத்து ஹோமம் செய்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், வீட்டில் உள்ள நிதி பிரச்சனைகளை தீர்க்கும்.

நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்காக வழிபடும் பல்வேறு தெய்வங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும், குல தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் பித்ருக்களின் ஆசிகள் நமக்கு கிடைக்க வேண்டும். 

அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை முறையாக நிறைவேற்றா விட்டால் பித்ரு தோஷம் வந்து சேரும். பித்ரு தோஷம் இருந்தால், எந்த தெய்வம் நமக்கு அருள் செய்ய வந்தாலும் அதை தடுத்து விடும். அதனால் தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் பித்ருக்களின் ஆசிகளை நாம் முதலில் பெற வேண்டியது அவசியம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top