அணைந்த தீபம் தானாக எரியும் அதிசயக் கோவில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அணைந்த தீபம் தானாக எரியும் அதிசயக் கோவில் பற்றிய பதிவுகள் :

நமக்கு தெரிந்த கோவில்களில் நமக்கே தெரியாத பல அதிசயங்கள் காணப்படும். அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் நடக்கும் அதிசயத்தைப் பற்றி பார்ப்போம்.

அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேப்பெருமாநல்லூரில் உள்ளது. குடந்தை நாகேஸ்வரம் திருக்கோவிலிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர் தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இந்த கோவில் 2000 வருடங்களுக்கு மிக பழமையான கோவில் ஆகும். இக்கோவிலின் மூலவராக விஸ்வநாத சுவாமியும், வேதாந்தநாயகி அம்மனும் அருள்பாலித்து வருகின்றனர். 

அணைந்து தானாக எரியும் தீபம் : 

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னதியில் வேதாந்தநாயகி அம்பாள் வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக அருள்புரிகிறாள். 

அம்பாள் சன்னதியில் நான்கு வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில் அணைந்து மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது, இது பெரும் அதிசய நிகழ்வாகும். 

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார் :

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது விழுவதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப்பட்டுள்ளது.

நாகம் வந்து வழிபடுகிறது : 

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top