சரபேஸ்வரர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரபேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சரபேஸ்வரர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும். சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபேஸ்வரரின் மூன்று கண்கள்.

சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபேஸ்வரர் பைரவர் அம்சம். இவருக்கு 11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம்.

சிவன் , விஷ்ணு , காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேஸ்வரர்.

எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடனும், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகவும் செருக்குடன் பகைவர் குலத்தை அழிப்பவரே சரபேஸ்வரர்.

இரணியனது வரத்தின் படியே, அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.

நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.

பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார். 

சரபேஸ்வரர் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.

பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கப்படுகின்றது.

பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபேஸ்வரர். 

சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள். பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள். இந்திரனே நகங்கள். காலனே தொடைகள். 

சரபேஸ்வரர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும் :

தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 108 அல்லது 1008 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும். 

சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும். மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்குகோபம் போய் பயம் வந்தது.

அந்த பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார். 

இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

சரபேஸ்வரர் பூஜை :

ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் (4.30 to 6pm) சரபேஸ்வரர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை பூஜை முடிந்தவுடன் சரபரேஸ்வரர் உள் கர்ப கிரகத்தில் பக்தர்கள் சுற்றி வந்து வழிபடுவார்கள்.

எட்டு வாரம் தொடர்ந்து சரபேஸ்வரர் பூஜையில் கலந்து கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top