நீரில் நனையும் சிவலிங்கம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நீரில் நனையும் சிவலிங்கம் பற்றிய பதிவுகள் :

சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைக்க கூடியதாகவும் இருக்கும். 

அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் நீரில் நனையும் சிவலிங்க ஆலயத்தை பற்றிப் பார்ப்போம்.

அருள்மிகு ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவலில் அமைந்துள்ளது. 

இந்த ஆலயத்தில் ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் அருள்புரிகின்றனர். இக்கோவிலின் கோபுரம் மிக அழகாக காட்சியளிக்கும்.

 இக்கோவில் மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டேயிருக்கும்.

லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். 

லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். 

இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத் தான் தரிசிப்பார்கள்.

இக்கோவில் முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இதன் சிறப்பாகும்.

 ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக கருவறைக்குள் தண்ணீர் அதிகமாக இருக்கும். 

வைகாசி மாதத்தில் தண்ணீர் ஓரளவிற்கு குறைவாக காணப்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top