அற்புதம் நிறைந்த ஆவணி மாதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அற்புதம் நிறைந்த ஆவணி மாதம் பற்றிய பதிவுகள் :

ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. தமிழ் வ‌ருடத்தில் ஐந்தாவதாக வரும் மாதமானது தமிழ் சந்திர மாதத்தில் ஆவணி என்று அழைக்கப்படுகிறது.

ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது. 

கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. ஆவணியில் விநாயக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் ஓணம் கொண்டாடப்படுகின்றன.

ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், ஆவணி ஞாயிறு புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற வழிபாடுகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இளையான்குடி மாறநாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் ஆகியோர்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத விழாக்களைக் கொண்டாடி வாழ்வின் மேன்மையை அடைவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top