சகலவிதமான பாவங்களை போக்கும் கோமாதா வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகலவிதமான பாவங்களை போக்கும் கோமாதா வழிபாடு பற்றிய பதிவுகள் :

கோமாதாவை நாம் தெய்வமாக போற்றும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பால் தருவதால் மட்டும் கோமாதாவை நாம் வணங்குவதில்லை. கோமாதாவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். எனவே, கோமாதாவை பூஜிப்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணியலோகத்தை அடைவார்கள்.

நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. இந்த கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை பற்றிப் பார்ப்போம்.

குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோமாதா பூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.

கோமாதா பூஜை செய்தால் துன்பங்கள் விலகி இன்பமான வாழ்க்கை அமையும்.
வியாபாரம் விருத்தியடையும். நிலையான இலாபம் கிடைக்கும்.

திருமணம் நடைபெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்த கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.

அதுமட்டுமின்றி நவகிரக பீடை, நவகிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். 

ஆணுக்கு சிறந்த நற்குணமுள்ள பெண் மனைவியாகவும், பெண்ணுக்கு நல்ல ஆண் கணவனாகவும் கிடைக்க இந்த கோமாதா பூஜையை செய்யலாம்.

பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேரவும், கணவன்- மனைவி ஒற்றுமையுடன் வாழவும் இந்த கோபூஜை செய்வது அவசியமாகும்.

கோமாதா பூஜை செய்தால் நோய் நொடிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். அதுமட்டுமின்றி செல்வச் செழிப்பும், வழக்குகளில் வெற்றியும் உண்டாகும். மேலும், நீங்கள் செய்த பாவங்களும் நீங்கும்.

இளைத்த கோமாதாவை வாங்கி வளர்த்தாலும் பெரும் புண்ணியம் நம்மைச் சேரும். கோமாதாவைக்கொன்றவர்களுக்கும், கொலைக்காகக் கொடுத்தவர்களுக்கும், அதன் இறைச்சியை உண்டவர்களுக்கும் துன்பம் உண்டாகும்.

இரக்கமின்றி கோமாதாவை துன்புறுத்துபவர்கள் நரகத்தைச் சேர்வார்கள்.
மேலும், கோமாதாவின் குருதியானது ஒருதுளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம்செய்வார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே கோமாதாவை துன்புறுத்தாமல் பாதுகாத்து பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top