முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக தைப்பூசம் உள்ளது.
சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ;ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.
கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய அதிபதி முருகன் ஆவார். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்(செவ்வாய்) தான்.
அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று முருகனை வணங்கினால் கவலைகள் அகலும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம்.
வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் மொத்தம் ஆறு தீபமிட்டு ஆறுமுகனை வழிபாடு செய்து வந்தால், சீரும் சிறப்புமாக வாழலாம்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படத்தை வைத்து வழிபட வேண்டும். முருகன் அன்னதான பிரியர் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளும் கிடைக்கும்.
இழந்த பதவி மீண்டும் கிடைக்க ஆறுமுக கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதி ஆகிய நாட்களில் விரதம் இருப்பது உகந்தது.
அதுமட்டுமின்றி கந்தசஷ்டி, தைப்பூச நாட்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.
கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் முருகனின் அருள் பூரணமாக கிடைக்கும்.