கடவுளை வணங்கும் போது கற்பூரம் ஏற்றி வழிபடுவோம். இந்த கற்பூரம் ஏற்றுவதற்கான காரணம் என்னவென்று நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
கற்பக்கிரகத்தில் இருக்கும் கடவுளின் சிலை, புகை மற்றும் எண்ணெயால் மாசுபடக்கூடாது என்பதற்காக விளக்கு வெளியில்தான் ஒளியேற்றப்பட்டிருக்கும்.
இதனால் கடவுளை வணங்கும் போது கற்பூரம் ஏற்றுவதால் கடவுளின் முகம் இருள் நீங்கி பிரகாசமாகத் தெரியும். மேலும் கற்பக்கிரகத்தைப் போல் மனமும் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என்றும் பொருள்படும்.
கோவிலில் அர்ச்சகர் மூர்த்தியின் பெருமைகளை கூறும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும்.
மேலும் கற்பூரம் ஏற்றுவதால் சுற்றி இருக்கும் தேவையில்லாத கிருமிகளும் அழிகின்றன. இதனால் கடவுளை வணங்கும் போது சுற்றுச்சூழல் தூய்மையாகிறது.
இதுமட்டுமில்லாமல் கற்பூரம் என்பது ஒரு வினோதமான டைரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன்) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும்.
கற்பூரம் போல் வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதை குறிக்கிறது.