நினைத்தை நிறைவேற்றும் மஹா சங்கடஹர சதுர்த்தி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்தை நிறைவேற்றும் மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றிய பதிவுகள் :

மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு எத்தனையோ விதமான விரதங்கள் இருக்கின்றன. ஆனால் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வாழ்வில் ஏற்படக் கூடிய தடைகள், கஷ்டங்கள் அனைத்தும் விலகி, நினைத்த காரியங்கள் நடப்பது ஒரே ஒரு விரதம் தான் உள்ளது. அது சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். 

மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். இது விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் வரும் போது அதை மஹா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

சங்கடம் என்றால் வாழ்வில் நமக்கு வரும் பலவிதமான துன்பங்கள். ஹர என்றால் வேரொடு அறுப்பது. வாழ்வில் நமக்க வரக் கூடிய அனைத்து விதமான துன்பங்களையும் நீக்கக் கூடிய சதுர்த்தி விரதம் என்பதால் இதை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். 

சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தால் விலகி விடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நாளில் ஒரே ஒரு மந்திரத்தை சொல்லி வழிபட்டால் விநாயகரின் அருளை பெறுவதுடன், நாம் நினைத்த காரியங்களும் நடக்கும்.

சங்கடஹர சதுர்த்தி மந்திரம் :

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி அடையும், தொழில் வளர்ச்சி ஏற்படும், துன்பங்கள் விலகும். 

அதோடு விநாயகருக்குரிய மந்திரத்தை கோவிலுக்கு சென்று விநாயகர் முன் நின்றோ அல்லது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி வைத்தோ ஒரே ஒரு முறை சொன்னால் கூட படிப்படியாக வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, நினைத்த காரியம் கூடிய விரைவில் நினைத்த படி நடக்கும்.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண
கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல
சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்
கணபதயே ஸ்வாஹா."

இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். 

சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் துவங்குவது என எந்த சுப காரியம் துவங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று துவங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் இனி தொடர்ந்து சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top