சங்கடஹர சதுர்த்தி விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றிய பதிவுகள் :

சந்திரனின் இயக்கத்தை பொருத்து கணிக்கப்படும் திதி சதுர்த்தி எனப்படுகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி ஆகும். வடமொழியில் சதுர் என்பது நான்கு என்பதை குறிக்கும். ஒவ்வொரு 15 நாளைக்கு ஒருமுறை சந்திரனின் சுழற்சியால் சதுர்த்தி திதி வருகிறது.

சதுர்த்தி விரதம் இருக்கும் முறை என்ன?

விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கும் விரதம் சதுர்த்தி விரதம் ஆகும். விநாயகர் எளிமையான தெய்வம் என்பதால் சதுர்த்தி விரதமும் எளிமையானது. சதுர்த்தியன்று காலையில் நீராடி, விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அருகம்புல், வெள்ளெருக்கு ஆகியவற்றால் விநாயகருக்கு மாலை கட்டி போடலாம். முடிந்தவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருக்கலாம்.

என்ன நைவேத்தியம் படைக்கலாம் ?

விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், அவல், பொரி, கொழுக்கட்டை, சர்க்கரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது எதெல்லாம் முடியுமோ அவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

சதுர்த்தி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?

சதுர்த்தி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள், பலவிதமான வாழ்க்கை கஷ்டங்களால் அவப்படுபவர்கள் இந்த விரதத்தை இருக்கலாம். கேது தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் விநாயகரை வழிபடலாம்.

சதுர்த்தி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் குழப்பங்கள் அகலும், வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், கிரக தோஷங்கள் விலகும், சங்கடங்கள் நீங்கும். காரிய தடை நீங்கும். சகல விதமான செளபாக்கியங்களும் ஏற்படும்.

எந்த நேரத்தில் விரதத்தை துவங்க வேண்டும்?

சதுர்த்தி திதி துவங்கியதில் இருந்து விரதத்தை துவங்கலாம். அல்லது சதுர்த்தியன்று காலையிலேயே விரதத்தை துவங்க வேண்டும். மாலையில் விநாயகர் கோவிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள பிறகே விரதத்தை பிறைவு செய்ய வேண்டும்.

சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்?

விநாயகர் அகவல் படிக்கலாம். சதுர்த்திக்குரிய,"ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராயஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாயமமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யதுஅநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை படிக்கலாம்.

சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?

சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இருவேளையும் வீட்டில் விநாயகர் படத்தின் முன் விளக்கேற்றி, மலர்கள், அருகம்புல் சூட்டி வழிபட வேண்டும். விநாயகருக்கு உரிய மந்திரங்கள், பாடல்கள் பாடி, தீப, தூப ஆராதனை காட்டி பூஜை செய்யலாம்.

சதுர்த்தி பூஜை செய்வதற்கு என்ன பொருட்கள் தேவை ?

அருகம்புல், வெள்ளெருக்கு, மஞ்சள், சந்தனம், குங்குமம், வாசனை மலர்கள், தும்பை பூ சூட்டலாம். 21 வகையான இலைகள், மலர்கள், பழங்கள் கொண்டு விநாயகரை வழிபடுவது அதி விசேஷமான பலன்களை தரும்.

சதுர்த்தி அன்று என்னவெல்லாம் செய்யலாம்?

நெருப்பு சம்பந்தமான காரியங்களை சதுர்த்தி நாளில் செய்தால் வெற்றி கிடைக்கும். கடன்கள் அடைக்க, நீண்ட கால பகை சமரசம் பேச, வேத சாஸ்திரங்கள் கற்பதற்கு உரிய நாள் சதுர்த்தியாகும்.

சதுர்த்தி திதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தலாமா?

சதுர்த்தி திதி விநாயகர் மற்றும் எம தர்மனுக்கு உரிய திதி ஆகும். இதில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்ய ஏற்றதல்ல. முற்காலத்தில் மன்னர்கள் போர் துவங்குவதற்கு, எதிரிகளை வெல்வதற்கு, விஷ சாஸ்திரம் பயன்படுத்துவதற்காக, அக்னி பயன்பாட்டிற்கு இந்த நாளை பயன்படுத்தினர்.

பெண்கள் சதுர்த்தி விரதம் இருக்கலாமா?

பெண்கள் தாராளமாக சதுர்த்தி விரதம் இருக்கலாம். ஆடி மாதத்தில் வரும் நாக சதுர்த்தி அன்று பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் நாகதோஷம், திருத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதிருப்பது போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

எந்தெந்த பிரார்த்தனைகளுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம்?

குழந்தைகள் கல்வியில் சிறக்க, கிரக தோஷங்கள் விலக, குறிப்பாக கேது, நாக மற்றும் சந்திர தோஷம் உள்ளவர்கள் சதுர்த்தி விரதம் இருந்து வழிபடலாம். குழந்தை இல்லாதவர்கள், செய்யும் தொழிலில் தடைகள் இருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top