உலர்ந்து போனாலும் பூஜைக்கு பயன்படுத்தும் வில்வம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உலர்ந்து போனாலும் பூஜைக்கு பயன்படுத்தும் வில்வம் பற்றிய பதிவுகள் :

வில்வ இலை மிகவும் உயர்வானது. வில்வ இலை பெருமைகளை சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். 

ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லி இருக்கிறார்கள். 

ஒரு வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். 

அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாட்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். 

மற்ற மலர்களையோ இலைகளையோ அதைப் போல் பயன்படுத்தக் கூடாது. ஆனால் வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது வில்வ இலைக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top