விஜயதசமி ஏன் கொண்டாட வேண்டும்?தற்கால நடைமுறை, இராவணனை வதைத்த ஸ்ரீராமர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விஜயதசமி பற்றிய பதிவுகள் :

நவராத்திரி கொண்டாட்டத்தில் முக்கிய நாளாக விஜயதசமி பார்க்கப்படுகிறது. விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

ஆயுதபூஜை

ஒரு பெண்ணின் கையால் தான் தனக்கு மரணம் வர வேண்டும் என வரம் வாங்கிய மகிஷாசுரன், ஈரேழு உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான். ஒரு பெண்ணால் தன்னை கொல்ல முடியாது. தான் சக்தி படைத்தவன் என நம்பினான்.

மகிஷனின் கொடுமை அதிகரிக்கவே, அவனை கொன்றாக வேண்டும் என்ற நிலையில், தனி ஒரு பெண்ணால் மகிஷனை வதம் செய்ய முடியாது என்பதால், மும்மூர்த்திகளின் தேவிகளும் இணைந்து துர்க்கை ரூபமாக தவமிருந்து, விரதமிருந்து மகிஷாசுரனுடன் போரிட்டார்.

போரின் 9ம் நாள் மகிஷாசுரனை கொல்ல ஆயுதங்களுக்கு பூஜைப் போட்ட நிகழ்வு ஆயுத பூஜையாக நாம் கொண்டாடுகின்றோம்.

தற்கால நடைமுறை :

துர்கை அம்மன் மகிஷனை அழிக்க ஆயுதங்களுக்கு பூஜித்தது ஒருபக்கம். தற்போது நாம் நம் வாழ்வை நடத்த தினமும் பயன்படுத்தும் தொழில் உபகரணங்களை வணங்கி பூஜித்து வருகிறோம்.

விஜயதசமி ஏன் கொண்டாட வேண்டும்?

மகிஷாசுரனை வென்ற மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் 10ம் நாள் திதி.

நாம் ஒரு சிறிய வெற்றியைப் பெற்றாலே தாம், தூம் என குதித்து வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் மகிஷனை அழித்து விண்ணுலகையும், மண்ணுலகையும் காத்து அருளிய மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியை கொண்டாடுவது அவசியாகிறது.

இராவணனை வதைத்த ஸ்ரீராமர் 

இந்த தினத்தில் தான் இராவணனை ராமபிரான் வதைத்ததாகக் கொண்டாடப்படுகிறது.

இன்ற தினம் நாம் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை. ஜோதிடத்தில் சந்திராஷ்டமம் என குறிப்பிடுவார்கள். எந்த ராசிக்கு சந்திரன் 8ம் இடத்தில் அமர்கிறாரோ அன்று அவருக்கு சந்திராஷ்டமம். அன்றைய தினம் அவருக்கு உகந்த நாளாக இருக்காது என்பார்கள்.

ஆனால் இந்த விஜயதசமி தினத்தில் அப்படி இல்லை. அன்னையின் வெற்றியை கொண்டாடக்கூடிய இந்த சுப தினத்தில், யாருக்கு அசுப தினம் என்று இல்லை.

யாராக இருந்தாலும் புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், மாணவர்கள் கல்வியில் புதிய பாடத்தை தொடங்குதல் என எதைத் தொட்டாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும் என்பது பலரும் உணர்ந்து உண்மை.

இதன் காரணமாக விஜயதசமி தினத்தை கொண்டாடுவது மிக அவசியமாகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top