ஆறுமுக சிவன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆறுமுக சிவன் பற்றிய பதிவுகள் :

சிவன் என்பவர் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாக வழிபடப்படுகிறார். சிவனுக்கு பல பெயர்கள் உண்டு. ஒரு முகம் கொண்ட சிவனையே அனைவரும் பார்த்திருப்பர். ஆனால் ஆறு முகம் கொண்ட சிவனை யாரும் பார்த்திருக்க மாட்டர்கள். ஆறுமுகம் கொண்ட சிவனை பற்றி இங்கு பார்ப்போம்.

சிவபெருமானுக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒரு பக்கத்துக்கு ஒரு முகம் என்ற அடிப்படையில் அவருக்கு ஆறுமுகங்கள். ஒரு பெட்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நான்கு பக்கங்கள் நான்கு திசைகளில் இருக்கும். மேலே உள்ள பக்கம் கண்ணுக்குத் தெரியும். கீழேயும் ஒரு பக்கம் உண்டு அல்லவா? அதுபோல சிவபெருமானுக்கு ஐந்து முகங்களோடு ஆறாவதாக கீழ்ப்புறம் ஒரு முகம் உண்டு. அது அதோமுகம் எனப்படும்.

இந்த ஆறுமுகங்களிலிருந்து வந்த தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அவற்றை கார்த்திகைப் பெண்களான ஆறு பேர் வளர்த்தார்கள். அதனால் முருகனுக்கு கார்த்திகைச் செல்வன் என்ற பெயர் வந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு முருகன் எல்லா பாக்கியங்களையும் தருகிறார்.

கார்த்திகை தீப நாளன்று தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பொரியிலுள்ள வெண்மை நிறம் சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மனவலிமையையும் குறிப்பதாக ஐதீகம்.

முருகக் கடவுள் கார்த்திகேயன், சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப்பொறி உருண்டை வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைக்கப்படுகிறது.

ஆறுமுகம் கொண்ட சிவனின் தோற்றத்தால் ஆறுமுகன் தோன்றினான். ஆறுமுகனை வணங்குவதால் கிடைக்கும் நற்பலன்கள் அனைத்தும் ஆறுமுக சிவனை வணங்குவதாலும் கிட்டும்.

அனைவரின் உள்ளத்திலும் குடிகொள்ளும் இறைவனை வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களையும், நலங்களையும் பெறுவோமாக..!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top