தீப ஒளி திருநாள், 2023 தேதி, நேரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீப ஒளி திருநாள் பற்றிய பதிவுகள் :

தீபாவளி, தீபங்களின் திருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது தீமையை அழித்து, நன்மையை காத்து, உலகின் இருளை அகற்றியதை கொண்டாடும் பண்டிகையாகும். 

தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்திலும், ஆங்கில மாதங்களில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வழக்கமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து புராணங்களின் பலவிதமான கதைகளும், காரணங்களும் சொல்லப்படுகின்றன. 

ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளையே தீபாவளியாக கொண்டாடுவதாக தென்னிந்திய மக்களால் நம்பப்படுகிறது. 

இந்தியாவின் இன்னும் சில பகுதிகளில், ராவணனை வதம் செய்த பிறகு சீதையை மீட்டு, லட்சுமணர், அனுமான் ஆகியோருடன் ஸ்ரீராமன் மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தீபம் ஏற்றி கொண்டாடியதாக சொல்லப்படுகிறது. 

மற்றொரு கருத்தாக, மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக இன்னும் சிலர் சொல்கிறார்கள்.

ராமாயணத்தில் ராமர் தனது 14 வருட வனவாசத்தை நிறைவு செய்து அயோத்திக்கு திரும்பிய நாளையே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும், மகாபாரதத்தில் சூதாட்டத்தில் நாடு, மக்கள், செல்வம் என அனைத்தையும் கெளரவர்களிடம் இந்த பாண்டவர்கள் தங்களின் 12 ஆண்டு கால வனவாசத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இதே நாளில் என்றும் சொல்லப்படுகிறது. 

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதும் இதே நாளில் தான் என சொல்லப்படுகிறது. ஆனால் இது இருளை நீக்கி, செல்வத்தை தரும் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.

தீபாவளி 2023 தேதி, நேரம் :

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. 

இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு நாள் பண்டிகையாகவும், வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாகவும் கொண்டாடப்படும். 

இந்த ஆண்டு நவம்பர் 10 ம் தேதி துவங்கி, நவம்பர் 15 வரை தீபாவளியை மக்கள் கொண்டாட உள்ளனர். ஐப்பசி மாத அமாவாசை நாளிலேயே தீபாவளி பண்டிகை வரும். 

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டியான நவம்பர் 12 ம் தேதி பகல் 03.10 மணிக்கே அமாவாசை திதி துவங்கி விடுகிறது.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் நவம்பர் 13 ம் தேதி காலையிலேயே துவங்க வேண்டும். நவம்பர் 12 ம் தேதி மாலை 05.40 மணி முதல் இரவு 07.36 வரை லட்சுமி பூஜை செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. 

அதே சமயம் நவம்பர் 12 ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரம் ராகு காலமும், பகல் 12 முதல் 01.30 வரை குளிகை நேரமும் உள்ளது. 

அதனால் இந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாகும். 

இந்த நேரத்தில் லட்சுமி தேவியையும், விநாயகர் மற்றும் குபேரரை வழிபடுவதால் வற்றாத செல்வம் வீட்டில் நிறைந்திருக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top