சூரிய விரத விதிமுறைகள் :
விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராட வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அர்ச்சனைக்கு ஒரு தட்டை தயார் செய்து, அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளிக்க வேண்டும்.
பூஜை முடிந்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டியது ஏதேனும் இனிப்பு வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.
காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, சாப்பிட்டு விட வேண்டும். ஒருவேளை சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக சாப்பிடவில்லை என்றால், கட்டாயம் அன்றைய நாள் முழுக்க சாப்பிடக்கூடாது. அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்குப் பின்னர் தான் சாப்பிட வேண்டும்.
பலன்கள் :
சூரிய விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும்.
கொடிய நோய்கள் ஏதும் அண்டாது.
முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும்.
சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.
பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.
துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.
தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள். அத்தகைய மகத்துவம் வாய்ந்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம்.