ஸ்ரீவாலாம்பிகை எனும் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி.
சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர்.
அத்தகைய ஆதிசக்தியின் அம்சம்தான் வாலை தெய்வம். அவளையே போற்றி பூசித்தனர். இந்த அம்சம் ஒன்பது வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!
நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் ”வாலை” ”வாலாம்பிகை” என்றும் சித்தாந்தம் வணங்குகிறது. சமஸ்கிருதத்தில் ”பாலா” என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது.
’வாலை’ அகத்தியர், திருமூலர், போகர், கொங்கணர், கருவூரார் என அனைத்து சித்தர்கள் வணங்கிய தெய்வம், சக்தி மிக்க ’பாலா’ என்னும் தெய்வம். ‘பாலா’ உபாசனை சித்தர்கள் செய்தது.
அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை.
லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலா. ஸ்ரீபாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம்.
நித்ய கல்யாண சீலையான இவள், (நிவஸதி ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா- பாலா தியான சுலோகம்) சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.
ஆதிபராசக்தியான ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி, ஔஷத லலிதா திரிபுர சுந்தரி, காமாட்சி ருபிணீ. ஐப்பசி பூரம் அவதார திருநட்சத்திர தினம் காஞ்சி காமாட்சி காமகோடி பீடம் அம்பாளுக்கு இன்று குங்கும பூ அங்கி அலங்காரமும், தில்லைசிவகாம சுந்தரி நடராஜர் சந்நிதியில் பட்டு புடவைவாங்கும் வைபவம், காந்திமதி அன்னை திருக்கல்யாணம் நடைபெறும்.
ஓம் ஐம் க்லீம் சௌ
ஸ்ரீபாலா திரிபுரசுந்தர்யை நமோ நம: