துர்க்கை அம்மனுக்கு பிரார்த்தனை செய்து, விளக்கேற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும். செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மனதை முழுமையாக ஈடுபடுத்தி துர்க்கையை வழிபட அன்னை வேண்டுதலை நிறைவேற்றுவாள்.
துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும்.
துர்க்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் துர்க்கைக்கு உகந்தவையே.
அனைத்து அம்சங்ளும் நிறைந்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் துர்க்கை நவ வடிவங்களில் காட்சி தருகிறாள்.
சைலபுத்ரி
பிரம்மச்சாரிணி
சந்திரகாண்டா
குஷிமாண்டா
ஸ்கந்த மாதா
காத்யாயனி
காளராத்திரி
மகாகௌரி
சித்திதாத்ரி
துர்க்கையை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.