சனி கிரக பாதிப்புகளும், அதனால் செய்ய வேண்டிய பரிகாரங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனி கிரக பாதிப்புகளும், அதனால் செய்ய வேண்டிய பரிகாரங்களும் பற்றிய பதிவுகள் :

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.

சனி பகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, முதலில் செய்ய வேண்டியவை என்னவென்றால் கைப்பிடி பச்சரிசியை எடுத்து, நன்றாக பொடி செய்து கொண்டு சூரியனை வணங்க வேண்டும்.

சூரியனை வழிபட்ட பிறகு குளக்கரையிலோ அல்லது மரத்தின் அடியில் இருக்கும் விநாயகரையோ மூன்று முறை வலம் வந்து வழிபட்டு, பொடி செய்த பச்சரிசி மாவை தரையில் போட வேண்டும். குறிப்பாக வன்னிமரத்தின் அடியில் இருக்கும் விநாயகரை வலம் வருவது மிகவும் விசேஷம்.

அவ்வாறு போடும் மாவை எறும்புகள் எடுத்துச் செல்லும், அதுமட்டுமில்லாமல் பச்சரிசி மாவை எறும்புகள் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். 

வீட்டு வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும் என்று சொல்வதுகூட இதற்காகத்தான். இந்த பரிகாரத்தை எப்போதுமே தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது.

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி மற்றும் யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளாத மனோபாவம் உருவாகிவிடும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஏழரைச் சனியின் பாதிப்பை விடவும் அஷ்டமத்து சனி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவார்.

அஷ்டம சனி பாதிப்பில் இருந்து விடுபட பரிகாரங்கள் :

மாதந்தோறும் சிவ ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

சனி திசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. மிகவும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து வரவும்.

சனிக்கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்கி வழிபடவும்.

சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை கண்டிப்பாக சாப்பிடவே கூடாது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரையும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவரையும் வணங்கி வரவும்.

ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கும், கால்களால் நடக்க இயலாதவர்களுக்கும் மற்றும் அன்னதானத்துக்கும் உதவி செய்யலாம்.

வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கி வருதல் மற்றும், ராம நாமத்தை தினமும் ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

இந்த நியதிகளை முறையாக கடைப்பிடித்து, சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top