பலன் தரும் வார விரதங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பலன் தரும் வார விரதங்கள் பற்றிய பதிவுகள் :

வாரத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம். ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

ஞாயிறு :

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்திவிட்டு இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

திங்கள் :

திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ;டிக்க வேண்டும். ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து, தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். 

செவ்வாய் :

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

புதன் :

புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. புதன்கிழமை விரதம் புகழைக்கொடுக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.

வியாழன் :

குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை. அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

வெள்ளி :

வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.

சனி :

சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top