ஒன்பது கிரகங்களும் அவற்றின் தெய்வங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒன்பது கிரகங்களும் அவற்றின் தெய்வங்களும் பற்றிய பதிவுகள் :

ஜோதிடத்தில் கிரகங்கள் மொத்தம் ஒன்பது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை ஆகும். இவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு அதிபதி இருக்கின்றார். அந்த அதிபதியே கிரகங்களின் அதிதேவதை ஆகும். 

✓ நவகிரகங்களில் முதல் கிரகமான சூரியனின் அதிதேவதை சிவன், சிவனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

 ✓ சந்திரனின் அதிதேவதை பார்வதி. பார்வதி தேவியை வணங்கினால் புகழ் கிடைக்கும். 

✓ செவ்வாயின் அதிதேவதை முருகன். முருகனை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

✓ புதனுக்குரிய அதிதேவதை விஷ்ணு. விஷ்ணுவை வழிபட்டால் புத்தி கூர்மை கிடைக்கும், அறிவாற்றல் பெருகும்.

 ✓ வியாழனின் (குரு) அதிதேவதை பிரம்மா, தட்சணாமூர்த்தி. பிரம்மாவையும், தட்சணாமூர்த்தியையும் வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

✓ சுக்கிரனின் அதிதேவதை லட்சுமி, இந்திரன், வருணன். இவர்களை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

✓ சனி பகவானின் அதிதேவதை ஐயப்பன். ஐயப்பனை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும். 

 ✓ ராகுவின் அதிதேவதை காளி, துர்க்கை, மாரியம்மன். ராகுவிற்குரிய தெய்வங்களை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

✓ கேதுவின் அதிதேவதை விநாயகர், சண்டிகேஸ்வரன் இந்த தெய்வங்களை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 
ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய அதிதேவதைகளான தெய்வங்களை அந்த தெய்வத்திற்குரிய கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

குறிப்பாக ராகு கிரகத்திற்கான தெய்வத்தை ஞாயிற்றுக்கிழமையில் வணங்குவது நல்லது. கேது கிரகத்தை வழிபட திங்கட்கிழமை எமகண்ட நேரத்தில் வழிபட்டால் கேதுவின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

ஒவ்வொரு கிரகங்களுக்கும் உரிய கடவுளை வணங்கினால் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகி வாழ்வில் மங்களம் உண்டாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top