ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை பற்றிய பதிவுகள் :

ஒருவர் பிறக்கும்போது எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது ஒருவர் பிறக்கும்போது, சந்திரன் சஞ்சாரம் செய்கின்ற இடம் ஆகும். 

அதாவது ஒருவர் பிறக்கும் பொழுது உடல், மனோ காரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி ஆகும். 

ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வது ஜென்ம நட்சத்திரம் தான். அதனால்தான் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என வகுத்துள்ளனர்.

 ராசி மண்டலத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அதேப்போல் மொத்தம் 27 நட்சத்திரங்கள், இவற்றில் 3 நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம் என்ற கணக்கில் 9 கிரகங்கள் அதிபதியாக உள்ளன. 

அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி கேது. பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி சுக்கிரன். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி சூரியன். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி சந்திரன்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி செவ்வாய்.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி ராகு. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி குரு. 

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி சனி. ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதி புதன் என மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம் அதிபதியாக விளங்குகின்றது. 

உதாரணமாக, மூன்று நட்சத்திரங்களில் நீங்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அது உங்களுடைய ஜென்ம நட்சத்திரமாகும், மிருகசீரிஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள், உங்களின் அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும். 

இந்த மூன்று நட்சத்திரங்களில் உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களிலும், மற்ற இரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் செய்யக்கூடாதவைகளை தவிர்க்க வேண்டும். 

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் செய்ய தக்கவை என்றும், கூடாதவை, ஆகாதவை என செயல்களில் சிலவற்றை நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜென்ம நட்சத்திரத்தில் கல்வி கற்றல், குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு, உயர்பதவி ஏற்றல், உபநயனம் செய்தல், கிரகப்பிரவேசம் செய்தல், புத்தாடை அணிதல், தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றை செய்யலாம். 

ஜென்ம நட்சத்திரத்தில் திருமணம், சீமந்தம், முடி இறக்குதல், காது குத்து, எண்ணெய் குளியல், மருந்து உண்ணுதல், சாந்திமுகூர்த்தம், அறுவை சிகிச்சை, வெளியூர் பயணங்கள் போன்ற காரியங்களை கண்டிப்பாக செய்யக் கூடாது. 

பொதுவாக ஆண்கள் தங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்யக் கூடாது. ஆனால் பெண்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top