தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு பற்றிய பதிவுகள் :

விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.

உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்களை சிக்கலிலிருந்து விடுவித்து அருள் புரிகிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருபுவனம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர். 

பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.

இரண்யகசிபுவை வதம் செய்ய நாராயணன் நரசிம்ம அவகிதாரமாக எடுத்து வதம் செய்தும் ஆத்திரம் அடங்காமல் திமிறிய நரசிம்மனின் உக்கிரத்தை தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவவடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.

மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவையே சரபேஸ்ரர். தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், 4 கால்கள் மேல் தூக்கியபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி.

சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. லிங்க புராண குறிப்புகளும் சரபேஸ்வரரின் சக்தியைக் குறிப்பிட்டுள்ளது. இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

சரபேஸ்வரர் அக்னி தெய்வமாக வணங்குகிறோம். அக்னி தத்துவமான கடவுள் என்றாலும் நம் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளை அழித்து நம்மை பாதுகாத்து அபயமளிப்பவர். இவரை அண்டினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். 

கலியுக வரதனான சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, ஏவல், சூனியம் போன்றவை தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீவிரமான பிணிகளால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்து விடுபட சரபேஸ்வரரை அபய மடைந்தால் போதும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகள் அழிய இக்காலத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. செய்யும் செயல்களில் வெற்றிபெறவும், பிணிகள் நீங்கவூம் சரபேஸ்வரரை வழிபாடு செய்யலாம்.

சரபேஸ்வரரை வணங்கினால் தரித்திரங்கள் நீங்கும். சரபேஸ்வரரின் சக்தியான பிரத்யங்கிராதேவி வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க கூடியவள். சரபேஸ்வரரின் இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சம் என்பதால் நலம் காப்பவள் இவள் என்கிறது வேதம். 

காரியத்தடைகள் அகல சூலினி தேவியை வழிபட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஆபத்துகள் நம்மை நெருங்காமல் இருக்க பாதுகாப்பான வளையமாய் இருப்பது சரபேஸ்வரர் வழிபாடு.
விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top