பூஜை என்பது ஒரு ஆன்மீக செயல். நாம் பூஜை செய்யும் போது, தெரியாமல் சில பொருட்களை தரையில் வைத்து செய்வோம். அப்படி தரையில் வைத்து பூஜை செய்வது நல்லதா!. எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிவலிங்கம் :
வீட்டில் சிவலிங்கத்தை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். தரையில் நேரடியாக வைக்கவில்லை, துணியின் மீது தான் வைக்கிறேன் என்றும் வைக்காதீர்கள். ஒருவேளை வைக்க வேண்டுமானால், ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.
பூணூல் :
பூணூல், மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது.
சங்கு :
சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக்கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், அவ்வீட்டில் பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.
விளக்கு :
ஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றுகையில், அதனை தரையில் வைத்து செய்யக்கூடாது, மாறாக இதனை ஒரு சுத்தமான துணியில் மேல் வைத்து ஏற்றலாம்.
தங்கம் :
தங்கத்தில் லட்சுமி தேவி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்காதீர்கள்.
இந்தப் பொருட்களையெல்லாம் தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது. மேற்படி இந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்தால் வாழ்க்கையிலும், தொழிலும் பிரச்சனைகள் வரும்.