2024 தை மாத முக்கிய விசேஷங்கள், விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் முழு விபரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 2024 தை மாத முக்கிய விசேஷங்கள், விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் முழு விபரம் :

மார்கழி மாதம் நிறைவடைந்து, தை மாதத்தை வரவேற்க அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். தை மாதத்தின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியும், நட்சத்திறமும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். தை மாதத்தின் முதல் நாளை தித்திக்கும் இனிப்புடனான பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். பண்டிகை, திருவிழா, விரதம், விசேஷம் என அனைத்தையும் உள்ளடக்கிய மாதமாக தை மாதம் விளங்குகிறது. இந்த சிறப்பு மிக்க மாதத்தில் எந்தெந்த விசேஷ, விரத நாட்கள் எப்போதும் வருகிறது என தெரிந்து கொள்ளலாம்.

2024 தை மாத விசேஷ நாட்கள் :

தை 01 - ஜனவரி 15 (திங்கள்) - தைப்பொங்கல்

தை 02 - ஜனவரி 16 (செவ்வாய்) - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
தை 03 - ஜனவரி 17 (புதன்) - காணும் பொங்கல், உழவர் திருநாள்
தை 11 - ஜனவரி 25 (வியாழன்) - தைப்பூசம்
தை 12 - ஜனவரி 26 (வெள்ளி) - குடியரசு தினம்
தை 26 - பிப்ரவரி 09 (வெள்ளி) - தை அமாவாசை

2024 தை மாத விரத நாட்கள் :

தை 02 - ஜனவரி 16 (செவ்வாய்) - சஷ்டி
தை 06 - ஜனவரி 20 (சனி) - கிருத்திகை
தை 07 - ஜனவரி 21 (ஞாயிறு) - ஏகாதசி
தை 09 - ஜனவரி 23 (செவ்வாய்) - பிரதோஷம், சிவராத்திரி
தை 11 - ஜனவரி 25 (வியாழன்) - பெளர்ணமி
தை 15 - ஜனவரி 29 (திங்கள்) - சங்கடஹர சதுர்த்தி
தை 18 - பிப்ரவரி 01 (வியாழன்) - சஷ்டி
தை 23 - பிப்ரவரி 06 (செவ்வாய்) - ஏகாதசி
தை 24 - பிப்ரவரி 07 (புதன்) - பிரதோஷம்
தை 25 - பிப்ரவரி 08 (வியாழன்) - சிவராத்திரி
தை 26 - பிப்ரவரி 09 (வெள்ளி) - அமாவாசை

2024 தை மாத சுபமுகூர்த்த நாட்கள் :

தை 07 - ஜனவரி 21 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
தை 08 - ஜனவரி 22 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
தை 10 - ஜனவரி 24 (புதன்) - வளர்பிறை முகூர்த்தம்
தை 18 - பிப்ரவரி 01 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
தை 19 - பிப்ரவரி 02 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
தை 25 - பிப்ரவரி 08 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
தை 28 - பிப்ரவரி 11 ( ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்

2024 தை மாத அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி - ஜனவரி 18 (வியாழன்)
நவமி - ஜனவரி 19 (வெள்ளி)
கரி நாட்கள் - ஜனவரி 15(திங்கள்), ஜனவரி 16(செவ்வாய்), ஜனவரி 17(புதன்), ஜனவரி 25(வியாழன்), ஜனவரி 31 (புதன்)

2024 தை மாத வாஸ்து நாள் :

தை 12 - ஜனவரி 26 (வெள்ளி) - காலை 10.41 முதல் 11.17 வரை

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top