சூரிய பகவான் மகர ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ள தை மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் சூரியன் மகரத்திலும், சனி கும்ப ராசியிலும் சஞ்சரிக்கிறார். இதனால் 6 ராசிகளுக்கு பல விதத்தில் சுப பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மகர சங்கராந்தியில் சுப யோக பலன் கிடைக்கும். சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால், உங்கள் ஆசைகள் நிறைவேறி, செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும், புதிய வேலையைத் தேடிக்கொண்டிப்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் சக ஊழியர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு சுப யோகத்தின் காரணமாக நீங்கள் வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். மேலும் செல்வாக்கு மிக்க நபர்களையும் சந்திப்பதும் அவர்களின் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் மற்றும் கடின உழைப்பால் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகர சங்கராந்தி அன்று உருவாகும் சுப யோக பலன் கிடைக்கும். சூரியன் மற்றும் சனிபகவான் அருளால் உங்களுக்கு வராமல் தடைப்பட்டிருந்த பணம் கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன் பழைய கடன் தொல்லையிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத்தில் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும். நீங்கள் வேலை அல்லது கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு சூரியன், சனியின் அமைப்பானது பல விதத்தில் சுப யோக பலனை தரும். சூரியன் மற்றும் சனிபகவானின் ஆசி சொத்து வாங்க விரும்பத்தை நிறைவேற்றும். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
வியாபாரம், கடை வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பிற வருமான ஆதாரங்களும் கிடைக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகர சங்கராந்தியில் உருவாகும் சுப யோக பலன்களாலும், சூரியன் மற்றும் சனி பகவானின் ஆசியால் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும்.
சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், உங்கள் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு உங்கள் புதிய நிலையை உயர்த்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடனும் நல்லுறவு மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்கு அதிபதி சனிபகவான் கும்பத்திலும், சூரியன் ராசியிலும் மாறியிருப்பதால் உங்களின் மரியாதையில் அதிகரிக்கும். உங்கள் சமூக வட்டமும் அதிகரிக்கும். சூரியன் மற்றும் சனிபகவானின் அமைப்பால் எதிர்பார்க்காத முன்னேற்றத்தை அடையலாம்.
நீதிமன்ற விவகாரங்களில் சிக்கித் தவித்தவர்கள் அதிலிருந்து நிம்மதி கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் சஞ்சாரமும், மகரத்தில் சூரியனும் சஞ்சாரம் நடப்பதால், வணிகத்தில் விரும்பிய லாபத்தைப் பெறுவதில் வெற்றி பெறுவார்கள். புதிய வணிக ஒப்பந்தங்களைச் செய்வதிலும் வெற்றி பெறுவார்கள். சிலருடன் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடியவர்கள் லாபத்தையும், ஆதரவையும் பெறுவீர்கள்.
தந்தையுடன் தகராறு தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.