தமிழ் மாதங்களில் புண்ணிய நிறைந்த மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் சொல்லுவது உண்டு. மாசி மாதத்தில் தாலி சரடினை மாற்றிக் கொண்டால் கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.
மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டிற்கும், தான தர்மங்கள் செய்வதற்கும் ஏற்ற காலமாகும். மற்ற மாதங்களில் வரும் ஏகாதசியில் விரதம் இருப்பதை விட மாசி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதம் இருப்பது மிகவும் புண்ணியமானதாகும்.
கல்வியில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் மாசி மகத்தன்று கல்வி தொடர்பான பணிகளை துவங்கினால் தொட்டது அனைத்தும் வெற்றியை தரும்.
இந்த ஆண்டு மாசி மாதம் பிப்ரவரி 13ம் தேதி துவங்கி, மார்ச் 13ம் தேதி நிறைவடைகிறது. அளவில்லாத மகத்துவம் கொண்ட மாசி மாதத்தில் வேறு என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த நாளில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாசி மாத விசேஷங்கள் :
• மாசி 06 - பிப்ரவரி 16 (வெள்ளி) - ரதஸப்தமி
• மாசி 12 - பிப்ரவரி 24 (சனி) - மாசி மகம்
• மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி) - மஹா சிவராத்திரி
மாசி மாத விரத நாட்கள் :
• அமாவாசை - மாசி 27 - மார்ச் 10 (ஞாயிறு)
• பெளர்ணமி - மாசி 12 - பிப்ரவரி 24 (சனி)
• கிருத்திகை - மாசி 04 - பிப்ரவரி 16 (வெள்ளி)
• திருவோணம் - மாசி 24 - மார்ச் 07 (வியாழன்)
• ஏகாதசி - மாசி 08 - பிப்ரவரி 20 (செவ்வாய்), மாசி 23 - மார்ச் 06 (புதன்)
• சஷ்டி - மாசி 03 - பிப்ரவரி 15 (வியாழன்), மாசி 18 - மார்ச் 01 (வெள்ளி
• சங்கடஹர சதுர்த்தி - மாசி 16 - பிப்ரவரி 28 (புதன்)
• சிவராத்திரி - மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி)
• பிரதோஷம் - மாசி 09 - பிப்ரவரி 21 (புதன்), மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி)
• சதுர்த்தி - மாசி 01 - பிப்ரவரி 13 (செவ்வாய்), மாசி 30- மார்ச் 13 (புதன்)
மாசி மாத சுபமுகூர்த்த நாட்கள் :
• மாசி 07 - பிப்ரவரி 19 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
• மாசி 09 - பிப்ரவரி 21 (புதன்) - வளர்பிறை முகூர்த்தம்
• மாசி 10 - பிப்ரவரி 22 (வியாழன்) - வளர்பிறை முகூர்த்தம்
• மாசி 14 - பிப்ரவரி 26 (திங்கள்) - தேய்பிறை முகூர்த்தம்
• மாசி 18 - மார்ச் 01 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
• மாசி 24 - மார்ச் 07 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
• மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
மாசி மாத அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
• அஷ்டமி - மாசி 04-பிப்ரவரி 16 (வெள்ளி), மாசி 20- மார்ச் 03 (ஞாயிறு)
• நவமி - மாசி 05 - பிப்ரவரி 17 (சனி), மாசி 21 - மார்ச் 04 (திங்கள்)
• கரி நாட்கள் - மாசி 15- பிப்ரவரி 27(செவ்வாய்), மாசி 16 - பிப்ரவரி 28(புதன்), மாசி 12 - பிப்ரவரி 29 (வியாழன்)