ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். ஆகவே, சூரிய தோஷத்தை போக்க செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.
சூரிய தோஷம் உடையவர்கள், கோவிலில் சூரிய பாகவானுக்கு அபிஷேகம் செய்யலாம். கோதுமை தானம் கொடுக்கலாம். சிவப்பு பட்டு, சிவப்பு பூ மாலை அணியலாம். சிவப்பு பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
சூரிய தோஷம் உடையவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலேயே வீட்டில் இருந்தவாறு சிவப்பு பூவும் நீரும் கைகளில் ஏந்தி, சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை போக்கியருளும் என வேண்டி பூவையும், நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும்.
மேலும், தினமும் சூரிய கவசம் படிப்பது நல்ல பலனைத் தரும். வீட்டிலேயே சர்க்கரைப்பொங்கல் வைத்து அதனை சூரியனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறையும் நல்லது. மேலும், பசுமாட்டுக்கு தவிடு வாங்கிக் கொடுங்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் விரதமிருந்து அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகல் விளக்கில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள் அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.
ஆதித்ய ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
வருடத்திற்கு ஒரு முறையாவது அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள்.