ஸ்ரீ இராஜமாதங்கி நவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ இராஜமாதங்கி நவராத்திரி பற்றிய பதிவுகள் :

தை அமாவாசை மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை 10.02.2024 முதல் 19.02.2024 வரை அம்பிகையை, பூரண அருள் பெறலாம், சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான தை வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திரு அவதாரம் செய்ததாக ஐதீகம். 

எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். 

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான, ஸ்ரீஇராஜ மாதங்கி எனும் சியாமளா தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் சியாமளா நவராத்திரி தினங்களாகும்.

சியாமளா தேவி:- 

சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹா மந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். 

இவள் தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். 

வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே சியாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம். 

ஸ்ரீராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். 

அம்பிகையின் மரகதப் பச்சை வண்ண நிறத்தவள் இது ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை அருளும் மீனாட்சி அம்சமானவள் இந்த ஸ்ரீஇராஜ மாதங்கி.

ஆதிசக்தி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, மகாராணி லலிதாம்பாள் அருட்கருணை கடாக்ஷம் எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top