கருடனை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கருடனை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றிய பதிவுகள் :

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அதுமட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.

மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மிகவும் சிறப்பானதாகும். கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

நோய்களால் பாதிக்கப்பட்டோர் இவரை விரதமிருந்து வழிபடுவதால் பிணி, பீடைகள் நிவர்த்தியாகும்.

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி தோஷம் மற்றும் செய்வினைக் குற்றம் ஆகியன இவரை வழிபடுவதால் நிவர்த்தி ஆகும்.

ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் கண்டாதி தோஷங்கள், விபத்து மற்றும் ஆயுள் பயம் ஆகியன நிவர்த்தி ஆகும்.

திருமணத்தடை, புத்திரதோஷம் போன்ற தடைகள் விலக இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

எதிரிகளை ஜெயிக்க, வழக்குகளில் வெற்றி பெற இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

படிப்பில் தேர்ச்சி பெற, வேலைவாய்ப்புக் கிடைக்க இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌபாக்கியம் உண்டாக இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில், வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் பெற இவரை வணங்குங்கள்.

நிலம், வீடு, மனை போன்றவற்றில் லாபம் உண்டாக இவரை வணங்குங்கள்.

விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கும் இவரை வணங்குங்கள்.

கிடைக்க வேண்டிய சொத்துக்கள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல் போன்றவை கருடனை வணங்குவதால் கிடைக்கும்.

மேலும், நியாயமான எண்ணங்கள், ஆசைகள் நிறைவேற கருட பகவானை விரதமிருந்து வழிபடுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top